Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
கடல் புறா
கடல் புறா
Series · 3 books · 1967
By
Sandilyan
Books in series
#1
கடல் புறா 1 [Kadal Pura]
1967
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர். கதைச் சுருக்கம் கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது, அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான். கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்கரகளிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான்.மஞ்சளழகி அவனிடம் காதல் வயபடுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான். பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைகரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் . ஸ்ரீவிஜயத்தை கைப்பற்றி சோழ புலிக்கொடியை பறக்கவிடுகிறான் . போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
#2
கடல் புறா 2 [Kadal Pura]
1967
இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்பது மட்டுமல்ல, ராஜராஜ சோழர் காலத்திலும், ராஜேந்திர சோழ தேவர் காலத்திலுமிருந்த தமிழர்களின் கடலாதிக் கத்தை மீண்டும் நிலை நிறுத்துவதென்றும் அன்றே பிரதிக்ஞை செய்தேன். அந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றவே இந்த அக்ஷயமுனை வந்தேன். இங்கு நமது கப்பலை நல்ல பலமுள்ளதாகச் செய்து பழுதும் பார்ப்போம். புதுப் புது விதப் போர்க்கலங்களை இதில் பொருத்து வோம்! பிறகு கடலோடுவோம்! கடலோடி, கலிங்கக் கப்பல்களை மறிப்பதற்கும், பிடிப்பதற்கும், அழிப்பதற்கும் கடலில் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அக
#3
கடல் புறா 3 [Kadal Pura]
1967
க
டல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக மாறிவிட்டதையும் அந்தக் காற்றின் பயங்கர ஒலியையும் கிழித்துக் கொண்டு எச்சரிக்கைக் கூச்சலொன்று நடுப் பாய்மரத்தின் உச்சியிலிருந்து எழுந்ததையும் கவனித்த இளையபல்லவன், கையிலிருந்த திசை காட்டும் கருவிப் பேழையைக் கண்டியத்தேவனிடம் கொடுத்து அதை மீண்டும் தனது அறைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுப் பக்கத்திலிருந்த பலவர்மனைப் பற்றிச் சிறிதும் சட்டை செய்யாமல் தனது மேலங்கியைக் கழற்றித் தளத்தில் எறிந்துவிட்டுக் காலிலிருந்து இடுப்புவரை மறைத்திருந்த சீனத்துச் சர
Author
Sandilyan
Author · 26 books