Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
வண்ணதாசன் சிறுகதைகள்
வண்ணதாசன் சிறுகதைகள்
Series · 9 books · 1978-2020
By
Vannadasan
Books in series
#2
தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
1978
இந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி,முனகல்,நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை,அமைதி என்று வெவ்வேறு அடர்த்தியுடன் அந்தக் குரல் இந்த வாழ்வின் பரப்பில் படர்ந்து கொண்டேயிருக்கிறது.நான் வாங்கிக் கொண்ட விதத்தில், என் காதில் விழுவதைச் சொல்கிறேன். சொல்வதைச் பாசாங்கின்றிச் சொல்வதே என் தொடர்ந்த முயற்சியாக இருக்கிறது.
#9
கிருஷ்ணன் வைத்த வீடு [Krishnan Vaitha Veedu]
2000
எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டிமுட்டிப் படைதேடுகிற நிஜம் அது. இந்தவிதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என்மீது கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்தவிதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.
#10
பெய்தலும் ஓய்தலும் [Peithalum Oaithalum]
2007
ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் முகம் பார்த்துப் பேசுவது குறைவு. பேச்சுக் குறையக் குறைய மொழி அழிகிறது. அழிகிற மொழியின் அழிகிற வாழ்வின் எச்சத்துடன் பதற்றம் நிரம்பிய முகங்களின் கதைகளை பதற்றம் நிரம்பிய மனத்துடன் சொல்ல வேண்டியதாகிறது
#11
ஒளியிலே தெரிவது [Oliyile Therivathu]
2010
சாகித்ய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு ’ஒளியிலே தெரிவது’ இந்த நூல் ‘சுஜாதா உயிர்மை விருது பெற்றுள்ளது. இந்த நூலின் முன்னுரையில் வரும் வண்ணதாசனின் வரிகள்: நான் என் கிளையோடும், இலையோடும். நிழலோடும் நின்றுகொண்டு இருக்கிறேன். நான் ஒளியிலே தெரிவேன். அல்லது என் நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒரு எளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்.
#12
ஒரு சிறு இசை
2013
சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். எழுபதுகளில் எழுதவந்தவர். தமிழில் அவருக்கு ஒரு முன்னோடி மரபு உண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் என ஒரு மரபு. ஒளிவிடும் ஓடை என மொழி வழிந்தோடும் தடம் என கதையின் வடிவத்தை அமைத்துக்கொண்டவர்கள் இவர்கள். ஓடை தடம் மாறுவதேயில்லை. காதலியின் முத்தம் போலவோ நூற்றுக்கிழவியின் ஆசி போலவோ எங்கோ சென்று தைப்பவை. வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம்.
#13
நாபிக் கமலம் [Naabi Kamalam]
2015
தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டது போல், எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்றுகொண்டிருக்கிறது; சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது. தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டது போல், எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்றுகொண்டிருக்கிறது; சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது.
#14
கமழ்ச்சி
2017
என் எழுத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் இடமுண்டு; புத்திசாலித்தனங்களுக்கு இடமே இல்லை. அசட்டுத்தனமாகவும், கள்ளம் கபடமற்ற சிறுபிள்ளைத்தனமாகவும் இருப்பது இயல்புதான். உணர்வுகள் பகடை உருட்டா. தொழுத கையுள்ளும் படை ஒடுங்காது. தரையில் விழுகிற மழைத் தாரை மாதிரி கொப்புளம் வெடிக்கும். ஆனால், உடனடியாக உடைந்து தண்ணீரோடு தண்ணீராகித் தரை நனைக்கும். எழுத்தும் தரை நனைக்கத்தான்.
#15
மதுரம்
2018
வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள் தான். இடது, வலது, முன், பின் என்றிருந்து தங்கள் தோழமையாலும், சூழலாலும், விரோதத்தாலும், எனக்கு இன்று நான் அறிந்திருக்கிற கொஞ்சத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்களே. என் கடைசி நிமிடம் வரை கற்றுக் கொள்கிற, விட்டுக் கொடுக்கிற எளிய திறந்த மனத்தை காப்பாற்றிச் செல்ல முடியுமெனில் அதுவே நானடைய விரும்பும் சம்பத்தாக இருக்கும். \- வண்ணதாசன்
#16
தீரா நதி
2020
நான் எல்லோரையும் காதலித்துக்கொண்டும் எல்லோராலும் கைவிடப்படும் ஒருவனாகவும், எல்லோரையும் விரும்பிக் கொண்டு எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஒருவனாகவும் தானே இருக்கிறேன். நான் கொண்டாடுகிற போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறவனாகவும் "ஒளியிலே தெரிவது" என்று நான் ஒரு கதை எழுதும் போது அதே கதையை யாராவது "நிழலிலே தொலைவது” என்றுதானே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.
Author
Vannadasan
Author · 9 books