Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ
துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ
Series · 5 books · 2018-2021
By
Sen Balan
Books in series
#1
சிரம் தர விரும்பு
2018
இளம் காவல்துறை அதிகாரி கார்த்திக் அல்டோ துப்பறியும் விறுவிறுப்பான நாவல். "உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும், நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒன்றை தெரியப்படுத்துகிறது. நாம் தான் கவனிப்பது இல்லை." - கார்த்திக் ஆல்டோ
#2
PARANGI MALAI IRAYIL NILAIYAM
2019
KDP Pen To Publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்ற நாவல் . இளம் காவல்துறை அதிகாரி கார்த்திக் அல்டோ துப்பறியும் விறுவிறுப்பான நாவல் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். ஜெட்வேக பயணத்திற்கு தயாராகுங்கள்.
#3
மாயப் பெருநிலம் Maaya perunilam
2019
துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் மூன்றாவது புத்தகமாக "மாயப் பெருநிலம்" வெளிவந்துள்ளது.வி.ஐ.பி ஒருவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை விசாரிக்கச் செல்கிறான் கார்த்திக் ஆல்டோ. அந்த விபத்தின் தொடர்ச்சியாக நேரிடும் நிகழ்வுகளை, புத்தகத்தைக் கீழே வைக்க முடியாத அளவு சுவாரசித்துடன் சொல்கிறது இக்கதை. தடயமே இல்லாமல் குற்றம் செய்வதில் வல்லவர்களான குற்றவாளிகள், அவர்களைப் பிடிக்க முனையும் திறமையான காவல்துறை அதிகாரி என பரபரப்பிற்குப் பஞ்சமில்லாத கதைக்களம்.இக்கதையில் வரும் பேராசிரியர் ஜெயச்சந்திரனைப் பார்க்கும் வரையில், கார்த்திக் ஆல்டோ தொடர்களில் ஆல்டோவை விட மனதில் நிற்கும் மற்றொரு நபர் இருப்பார் என்பதை நம்பமாட்டீர்கள்.
#4
நான்காவது நாள் Nangavathu Naal
2021
ஒரு மலை மீது கிடைக்கும் எலும்புக்கூட்டைப் பற்றி கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்லும் போது விரியும் உலகமே நான்காவது நாள்.
#5
கசேரய் Kaserai
2021
துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் ஐந்தாவது புத்தகமாக “கசேரய்” வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டின் மிக முக்கியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான கசேரய் எனும் நாற்காலி காணாமல் போன வழக்கை கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்கிறான். ஒரு சாதாராண திருட்டு வழக்காக ஆரம்பிக்கும் விசாரணை பல இருள் பக்கங்களின் மர்மங்களை வெளிப்படுத்தி மிகவும் சிக்கலான வழக்காக மாறுகிறது. மிகவும் புத்திசாலித்தனமாக அதீத திட்டமிடுதலுடன் குற்றம் செய்துள்ள குற்றவாளியை கார்த்திக் ஆல்டோவால் கண்டறிய இயலுமா? மறைந்துள்ள தடயங்களை எப்படி துப்பறிகிறான் என்பதை சுவாரசியம் குன்றாமல் கூறுகிறது “கசேரய்”. Investigative thriller எனப்படும் விசாரணை மர்மக்கதை வகைமையில் அமைந்த இந்நூல், வாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றும். நூலாசிரியர் பற்றி: சென் பாலன், அடிப்டையில் மருத்துவரான இவர் த்ரில்லர், துப்பறியும் வகை நாவல் எழுதுவதில் வல்லவர். இவரது இரண்டாவது நாவலான "பரங்கிமலை இரயில் நிலையம்" KDP pen to publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்றது. இவரது நாவல்கள் அமேசான் கிண்டில் பெஸ்ட் செல்லர் புத்தகங்களாக முத்திரை பதித்தவை.
Author
Sen Balan
Author · 5 books