தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாக வும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது. அதற்கு முன் அப்படி ஒரு அரசர் பரம்பரை இருந்தது என்பதை அறியாமலே இருந்தோம். 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்