இந்தக் கதை 1980'ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி 2060'ஆம் ஆண்டு வரை நிகழ்கிறது. எனவே தொலைபேசியில் தொடங்கி, செல்பேசிக்கு சென்று படிப்படியாக திறன்பேசி, மின்னீ வரை செல்கிறது. அதனால் படிப்பவர்களுக்கு அவர்களே பல காலக்கட்டங்களுக்கு பயணிப்பது போன்ற உணர்வு கிடைக்கும். நட்பு, காதல், பெற்றோர்களின் அன்பு என்று பலவிதமான மனித உணர்வுகளைத் தொடுவது மட்டுமின்றி ஒருவனுக்கு நேரத்தைக் கடக்கும் திறன் கிடைத்தால் என்ன ஆகும் என்ற கோணத்தில் மொத்த கதையும் செல்கிறது. பேச்சுத் தமிழும் தூய தமிழ் மொழி நடையும் சரியான அளவில் கலந்து இருப்பதால் படிப்பதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.