வணக்கம் மக்களே, மக்களின் அநேக ஆதரவுடன் இக்கதை இயல் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்றது. முழுக்க முழுக்க காதல் மட்டுமே நிறைந்த கதை. படிப்பவரும் அக்காதலில் மூழ்தி திளைப்பர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். கதையின் டீஸர் இதோ ——- அன்று அவர்களுக்கு முதலிரவு... மனம் நிறைந்த குழப்பத்துடன், தன் மனைவி மீதான கோபத்துடன் அந்த அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தான் சிவா. மனம் நிறைந்த ஆசையுடன், கணவன் மீதான காதலுடன், நாணம் கொண்டு தலை கவிழ்ந்து மனதில் துளிர்த்த சிறு படபடப்புடன் உள்நுழைந்தாள் கண்மணி. அறையினுள் நுழைந்தவளை வெறுமை பார்வையால் நோக்கியவன், அவனருகில் அவள் வரவும் மெத்தையிலிருந