வாசக தோழமைகளுக்கு அம்மு யோகாவின் அன்பான வணக்கங்கள்... “ஒருவார்த்தை சொல்லடா" பிறந்ததில் இருந்தே அந்நிய தேசத்தில் வாழும் மங்கையையும், மண்ணின் மைந்தனையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்றிணைக்க, எந்த விதத்திலும் பொருத்தமில்லாத இவர்கள் தங்களுக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும், தங்களது சமூகத்தை மேம்படச் செய்வதற்கும் எடுக்கும் முயற்சிகளும் அதனால் உண்டாகும் வெற்றிகளும் நிச்சயம் உங்கள் மனதை ஈர்க்கும் விதமாக இருக்கும். நமது வாழ்வியலிலும் இக்கதையில் வருவது போல் மாற்றங்களை புகுத்தினால் நாமும், நமது சமூகம் நிச்சயம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை காண முடியும். முயன்றால் முடியாதது இல்லை. இதில் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்களில் ஏதேனும் ஒ