
தென் அமெரிக்காவில் இருக்கும் பெரு என்ற நாட்டினைப் பற்றி நமக்குப் பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனால் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாட்டின் படப்பிடிப்பு மாச்சு பிச்சு என்ற உலக அதிசயத்தில் நடந்து பற்றி நாம் அறிவோம். அந்த அதிசயம் இருக்கும் நாடுதான் பெரு. அங்கு பயணம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்டின் தொன்மையும், வரலாறும், இயற்கையும் எனக்குப் பெரும் பரவசத்தை அளித்தன. அந்த அனுபவத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்நாட்டின் முழுமையான வரலாற்றையோ, புவியியல் பற்றியோ இந்தப் புத்தகத்தில் எழுதவில்லை. ஒரு பயணியாக சில அடிப்படைப் புரிதலைத் தரவே இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறேன்.