"அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்." என்னும் திருக்குறளுக்கு ஏற்ப நட்பு என்பது நண்பன் செய்யும் தவறனைத்திற்கும் துணை போவது அல்ல, தவறிழைக்கும் போது, அதை சரியான நேரத்தில் தெரிவித்து அவனை திருத்துவதே ஆகும்! அப்பேற்பட்ட நண்பர்களைப் பெற்றால் வாழ்வில் தோல்வி என்பதே இல்லை! காதல் ஒரு சிலருக்கு வரம், சிலருக்கு சாபம். சாபத்தை வரமாக்கத் தெரியும் எவருக்கும் காதல் கைகூடும். ஆனால் எவ்வழியில் காதலை அடைவது என்று சிந்தித்து செயல்படுவதை வைத்துத்தான் ஒரு மனிதனின் கர்மவினை தீர்மானிக்கப் படுகிறது! அந்த கர்மவினையே அவனை நல்லவன் என்றும் தீயவன் என்றும் பகுக்கிறது. இந்தக் கதை அப்படிப்பட்ட காதலையும் நட்பையும் மையமாக கொண்டு எழுதĪ