உன் ரசிகன் நானல்லவா மேக வாணி இரண்டாம் திருமணத்தில் இணைந்த பந்தமதில்... அவளுக்கு அவன் ரசிகனாக! அவனுக்கு அவள் ரசிகையாக! காலம் தரும் காயத்தை கலைக்க மனமில்லாது - வன்மிகு கனவுகளிலும் சேமிக்காதே ரசிகா! கடந்து வந்த காயம் காணாமல் போகும் வரை - வலி கொடுத்த காயத்திற்கு எதிராய் கடும் போர் புரிந்திடு! போரில் தோற்க நேர்ந்தாலும் பழி சுமக்க நானிருப்பேன் - வலியவனின் பாவனையை ரசிக்கும் ரசிகையாய்! என அவனை ரசிக்கும் தமிழரசியும்... ஸ்வரமற்ற வீணை தன்னை மீட்டும் வேடிக்கை அறிகிறேன்... உன்னால் நான் மீட்டப்படுவதோடு என்னுள் நான் மீட்கப்படுகிறேன்... என்னுயிர் அரசியே! என அவளை ரசிக்கும் தமிழின்பனும்...