அனுபவ ஜோதிடர் சித்தூர் எஸ்.முருகேசன் எழுதிய ஜோதிடம் 360 என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை படித்த எனக்கு நம் வாழ்வியலின் பல உண்மைகள் புரிந்தன. (இன்னும் புரிந்துகொள்ள முடியாத கோடிக்கணக்கான மர்மங்கள் மனித வாழ்வில் உண்டு. அதை உணர எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாது) 1. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெற முடியும். 2. தேவையற்றதை வாங்கினால் விரைவில் அத்தியாவசியமானதை விற்க நேரிடும். 3. முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க இளமையில் கஷ்டப்படுங்கள். இந்த மூன்று தத்துவங்களையும் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். வாழ்க்கை குறித்த எவ்வளவோ தத்துவங்கள் இருந்தாலும் இந்த மூன்றை உணர்ந்தாலே வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம். முதல் பதிப்பை முழுவதும் படித்ததும் ஜோதி