தமிழில் அறிவியல் சார் சிறுகதைகள் அறிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூராண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்கமுடியாத தொடர்பு இருந்துவருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றி மெக்ஸிகோ நகரத்தில் முடிகிறது. இடையில் பிரமிடுகள், சீலகந்த் மீன்கள், மர்மங்கள் பலவற்றின் முடிச்சு அவிழ்தல். படித்ததும் மறுபடியும் வாசகர்களை படிக்கத் தூண்டும் தமிழின் நல்ல அறிவியல் நாவல்களின் வரிசை ஒன்று தொடங்குவதற்கு சுதாகரின் இந்த முயற்சி தூண்டுகோளாக அமையும் என்று நம்புகிறேன். அவருக்கு எமது வாழ்த்துக்கள்! - பி.ஏ.கிருஷ்ணன்