நரேந்திரன் வைஜயந்தி ஏதேதோ குற்றங்களை ஆராய்ந்து, புதிதாக சில தடயங்களைக் கண்டுபிடித்து, தீராத பல வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், இந்தக் குற்ற ஆய்வை மேற்கொண்டபின், உண்மையாகவே உயிரைப் பணயம் வைக்கவும், துவளாமல் தோல்விகளை எதிர்கொள்ளவும் சவால் விடப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏராளமான அமானுஷ்யமான சம்பவங்கள். விடையில்லாத கேள்விகள். மிரட்டும் திருப்பங்கள். உயிரைக் குடிக்கும் சாகசங்கள். சுபாவின் “தூண்டில் கயிறு” மூன்று பாகங்களாக வெளிவந்தபோது வாசகர்களை மர்ம விளிம்பிலேயே வைத்திருந்த மாஸ்டர் த்ரில்லர். இப்போது உங்களுக்கு மூன்று பாகங்களும் முழுமையாக ஒரே புத்தகமாக இதோ.. A thrilling horror Mystery from Subha