
From Wikipedia: வண்ணநிலவன் (பிறப்பு : டிசம்பர் 15, 1949) ஒரு தமிழ் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டம், தாதன்குளம் எனும் கிராமத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன். இவர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி மற்றும் ஸ்ரீ வைகுண்டம் ஆகிய ஊர்களில் படித்தார். ‘துக்ளக்’ பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் வேலை சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.